ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
X

விழுப்புரம் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் அருகே உள்ள ராகவன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரது மனைவி கன்னியம்மாள் (40) என்பவர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். அப்பொழுது அவரது கையில் இருந்த பையிலிருந்து மண்ணெண்ணெய் கேனை எடுத்து திடீரென அவர் மீது ஊற்றிக் கொண்டார். பின்னர் அங்கு பணியில் இருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அவர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து அவரை காப்பாற்றினர்.

பின்னர் இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் தனக்கு சொந்தமான 10 சென்ட் இடத்தினை ராமச்சந்திரன் என்ற அதிமுக பிரமுகர் அபகரிக்க திட்டமிட்டு கொலை மிரட்டல் விடுவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுத்து தன்னுடைய இடத்தை மீட்டுத்தரக் கோரியும் மனு அளித்தார். இச்சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போலீசார் அவரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!