சூரியன் உதிக்க வாய்ப்பே இல்லை , விஜயபிரபாகரன்

சூரியன் உதிக்க வாய்ப்பே இல்லை , விஜயபிரபாகரன்
X

தமிழகத்தில் சூரியன் உதிக்க வாய்ப்பே இல்லை என விழுப்புரத்தில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேசினார்.

விழுப்புரம் தனியார் மண்டபத்தில் தேமுதிக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் சிறப்புரையாற்றினார்.அவர் பேசியதாவது: விஜயகாந்த் நலமுடன் உள்ளார். விரைவில் மக்களை சந்திப்பார். விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2005 ல் தேமுதிக கட்சியை அறிவித்து தேமுதிக தொடங்கப்பட்டது.கட்சியினர் தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும். கூட்டணி குறித்து கவலை வேண்டாம். அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற ஒருங்கிணைந்து உழைக்க வேண்டும்.

பொங்கல் வைப்பதற்கு சூரியன் உதிப்பது முக்கியம். ஆனால், சில தினங்களாக மழையால் சூரிய உதயம் காணவில்லை. தமிழகத்தில் சூரியன் உதிக்க வாய்ப்பே இல்லை என்பதை சுட்டிக்காட்டுகிறது. சட்டப் பேரவை தேர்தல் பிரசாரத்தை பலர் தொடங்கி விட்டனர். பொய் பிரசாரம் செய்வதற்கு அதிக நாள்கள் தேவைப்படும். உண்மை பேச கொஞ்ச நாள் இருந்தாலே போதும். விஜயகாந்த் மகன் என்பதே உயரிய பதவி. அதனால், கட்சிப் பதவி ஏதும் தேவையில்லை என்றார். இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஆசிரியர்களுக்கு உதவியாக மொபைல் செயலி: வேலை சுமையை குறைக்க புதிய முயற்சி..!