கொலை வழக்கில் சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு
விழுப்புரத்தில் கடந்த 2015 ம் ஆண்டு விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் சகோதரர் இருவருக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
விழுப்புரம் மாவட்டம் டி.புதுப்பாளையம் கிராமத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு மாடு கட்டுவதில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக தகராறு ஏற்பட்டு ராயர்(55) என்பவர் தடியால் அடித்து கொலை செய்யப்பட்டார்.இது தொடர்பாக திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய போலீசார் அதே ஊரை சேர்ந்த இறந்தவரின் பங்காளிகளான குமார்(24), சிவபாலன்(25) ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து வழக்கு விசாரணை கடந்த 5 ஆண்டுகளாக விழுப்புரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்தன. விசாரனை முடிந்த நிலையில் இருவருக்கும் ஆயுள்தண்டனை வழங்கி விழுப்புரம் மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி செங்கமலசெல்வன் தீர்ப்பளித்துள்ளார்.தண்டனை பெற்ற இருவரும் சகோதரர்கள் ஆவர். இதனை தொடர்ந்து இருவரும் கடலூர் மத்திய சிறைக்கு போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu