10 ஆண்டாக பட்டாசு சப்தம் கேட்காத கிராமம்: பசுமை மீது அத்தனை ஆர்வம்

10 ஆண்டாக பட்டாசு சப்தம் கேட்காத கிராமம்: பசுமை மீது அத்தனை ஆர்வம்
X

கோப்பு படம்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பட்டாசு இல்லாத பசுமை தீபாவளியை, கிராம மக்கள், தொடர்ந்து, 10வது ஆண்டாக கொண்டாடினர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள உள்ளது, பருவாய் ஊராட்சி, ஆறாக்குளம் கிராமம். இங்கு, 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். விவசாயம், விசைத்தறி மற்றும் கறிக்கோழி உற்பத்தி தொழில், இங்கு பிரதானமாக உள்ளது.

இயற்கை எழில் கொஞ்சும், பசுமைசூழ்ந்த இக்கிராமத்தில், குளம் குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் அதிகம். அங்கு, ஏராளமான பறவையினங்கள் வலசை வருவது வழக்கம். பருவகால மாற்றங்களின்போது பல, சில வெளிநாட்டு பறவைகளும் வந்து போவதாக கூறப்படுகிறது.

எனவே, பட்டாசு சத்தத்தால், பறவைகளுக்கு இடையூறு ஏற்பட்டுவிடக் கூடாது; சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்று இக்கிராம மக்கள் கருதி, கடந்த ஒன்பது ஆண்டுகளாக, தீபாவளியின் போது பட்டாசு வெடிக்காமல் இக்கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர். புத்தாடை அணைிந்து, இனிப்பு பரிமாறி, கோவிலில் வழிபாடு, கலை நிகழ்ச்சிகளுடன் தீபாவளியை கொண்டாடி, பறவைகளுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தி வருகின்றனர். பறவைகளுக்காக, பட்டாசுகளை வெடிக்காத இக்கிராம மக்களின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Tags

Next Story