கோடி கொடுத்தாலும் குளிர்பான விளம்பரத்தில் நடிக்க மறுத்த விஜயகாந்த்
பன்னாட்டு குளிர்பான விளம்பரங்களில் நடித்தால், 'டிவி' சேனல்களில் அடிக்கடி ஒளிபரப்பாகும்; நாடு நாடு முழுவதும், விளம்பர பேனர்களில் இடம் பெறலாம். இது தவிர, கணிசமான சம்பளமும் கிடைக்கும் என்ற ஆசையில் தான், நடிகர், நடிகையர் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்கள் நடிக்கும் விளம்பர பொருட்களில், மக்களின் பயன்பாடு என்ன, பாதிப்பு ஏதும் உண்டா என, பார்ப்பதில்லை.
ஆனால் இதில் விதிவிலக்காக சில நடிகர்கள் உள்ளனர்.
விஜயகாந்த் 1979 ஆம் ஆண்டு 'அகல் விளக்கு' திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 2015-ஆம் ஆண்டு வரை 150-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து தமிழ் மக்களின் அன்பை கவர்ந்து பிரபலமானவர்.
1998 - ஆம் ஆண்டில் கோககோலா நிறுவனம் தனது விளம்பர படத்தில் நடிப்பதற்காக விஜயகாந்திடம் ரூ.1 கோடி சம்பளம் தருகிறோம் எங்களின் கோக் நிறுவனத்திற்காக நீங்கள் நடித்து தர வேண்டும் என்று அந்த நிறுவனத்தினர் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
அந்த கால கட்டத்தில் ரூ.1 கோடி என்பது இன்றைய கால கட்டத்தில் கிட்டத்தட்ட ரூ.30 கோடி. ஆனால் விஜயகாந்த் அந்த நிறுவனத்திடம் ஒரே ஒரு பதில் தான் கூறினார். அதாவது, நான் உங்கள் கொக்ககோலா விளம்பரத்தில் நடித்தால் உண்மையிலேயே என் ரசிகர்கள் அனைவரும் வாங்குவார்கள். என் முகத்திற்காக பொதுமக்கள் அனைவரும் உங்கள் குளிர்பானத்தை வாங்கி அருந்துவார்கள்.
இதனால் பாதிக்கப்பட போவது என் தமிழ் மக்கள் தான். ஏன் என்றால் என் தமிழகத்தில் சிறு சிறு குளிர்பான நிறுவனம் உள்ளது. நான் உங்கள் கோககோலா நிறுவனம் கொடுக்கும் பணத்திற்காக நடித்தால் தமிழகத்தில் உள்ள சிறிய குளிர்பான நிறுவனம் பாதிக்கப்படும்.
அதனால் எனக்கு பணம் முக்கியம் இல்லை.எனக்கு தமிழ்நாடும் தமிழ் மக்களும் தான் முக்கியம். என்னால் தமிழகத்தில் உள்ள சிறு குளிர்பான நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்றால் அந்த விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன். அப்படியொரு பணம் எனக்கு தேவையில்லை என கோககோலா நிறுவனத்தினரை திருப்பி அனுப்பிவைத்தார் விஜயகாந்த்.
அப்படிப்பட்ட பணத்திற்கு ஆசைப்படாமல் பொதுநலனை கருத்தில் கொண்டு விளம்பரத்தில் நடிக்க மறுத்த ஒரு நல்ல மனிதனை தான் இந்த தேசம் இன்று இழந்து தவிக்கிறது.
அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu