வேலூர் மாவட்டத்துக்கு 7 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்து சேர்ந்தது

வேலூர் மாவட்டத்துக்கு 7 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்து சேர்ந்தது
X
வேலூர் மாவட்டத்துக்கு 7 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த நடவடிக்கை

தமிழகத்தில் கொரோனா 2 வது அலையின் தீவிரத்தை கட்டுப்படுத்துவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது . இதில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகளை செலுத்துவதை உறுதி செய்வதும் ஒன்றாக உள்ளது . அதேநேரத்தில் தடுப்பூசி பற்றாக்குறை அரசின் முயற்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் முதலில் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை அரசு மேற்கொண்டது . தொடர்ந்து 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது . ஆனால் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளின் குறைவான சப்ளையால் தற்போது 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2 வது டோஸ் தடுப்பூசியை உறுதி செய்வதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் , அதற்கடுத்தே முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .

அதன்படி , தற்போது 3 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் நேற்று வரை இருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு 7ஆயிரம் டோஸ் தடுப்பூசி வேலூருக்கு வந்துள்ளது. இந்த தடுப்பூசிகளும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் செலுத்தவேண்டும் என்று அரசு அறிவுறுத்தியள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் .

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!