/* */

வேலூர் அருகே வீட்டின் பூட்டு உடைத்து 36 சவரன் நகை திருட்டு

வேலூர் அருகே தனியார் மருத்துவமனை மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 36 சவரன் நகை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்

HIGHLIGHTS

வேலூர் அருகே வீட்டின் பூட்டு உடைத்து 36 சவரன் நகை திருட்டு
X

வீட்டின் பூட்டு உடைத்து 36 சவரன் நகை திருட்டு

வேலூர் அடுத்த புதுவசூர் கே.ஜி.என் நகரை சேர்ந்தவர் விஜயராகவன் ( 38 ) , தனியார் மருத்துவமனையில் மேலாளராக பணியாற்றி வருகிறார் . இவரது மனைவி கவிதா . இவர் திருவண்ணாமலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரிந்து வருகிறார் . இந்நிலையில் , கவிதாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், மனைவியை பார்ப்பதற்கு கடந்த 19ம் தேதி வீட்டை பூட்டி விட்டு திருவண்ணாமலைக்கு சென்று, அங்கேயே தங்கி உள்ளார் .

இதற்கிடையில் , விஜயராகவனின் வீட்டின் பூட்டு உடைக்கப் பட்டுள்ளதாக அக்கம், பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர் . இதன்பேரில் விஜயராகவன் , வீட்டிற்கு வந்து பார்த்தபோது மர்மநபர்கள் வீட்டின் பூட்டு உடைத்து பீரோவில் இருந்த 36 சவரன் தங்க நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது . இதுகுறித்து , சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தார் . அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர் . மேலும் தடயவியல் நிபுணர்கள் மூலம் தடயங்கள் சேகரித்தனர் . மேலும் வழக்குப் பதிவு செய்து நகை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர் .

கடந்த 17 ம் தேதி சத்துவாச்சாரி வாரியார் நகரில் வாட்டர் சப்ளை செய்யும் காதர்மெய்தீன் என்பவரின் வீட்டை உடைத்து 5 சவரன் நகை மற்றும் ரூபாய் 50 ஆயிரம் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர் . ஒரே வாரத்தில் சத்துவாச்சாரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட 2 வீடுகளில் நகை , பணம் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

Updated On: 21 Aug 2021 2:24 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?