வேலூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேலூர் தெகுதியில் போட்டியிட உள்ள நா. பூங்குன்றன் , காட்பாடி தொகுதியில் போட்டியிட உள்ள திருக்குமரன் மற்றும் அணைக்கட்டு தொகுதியில் போட்டியிட உள்ள சுமித்ரா ஆகிய 3 வேட்பாளர்களை ஆதரித்து வேலூர் மண்டித்தெருவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வேன் மூலம் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய சீமான், இந்தியாவில் மருத்துவம் மிகப் பெரிய வியாபாரமாக மாறி உள்ளது, தண்ணீர் மிகப் பெரிய சந்தை பொருளாக மாறி உள்ளது, எவை எல்லாம் அடிப்படையோ, எவை எல்லாம் அவசியமோ அவை எல்லாம் இன்று முதலாளிகளின் லாபம் ஈட்டும் தொழிலாக மாறி உள்ளது.
தற்போது கூட டெல்லியில் 110 நாட்களாக விவசாயிகள் போராடுவது விவசாயிகளுக்கான போராட்டம் மட்டும் அல்ல 130 கோடி மக்களுக்கான போராட்டம். அதற்கு நாம் தமிழர் கட்சியும் ஆதரவு அளித்து வருகிறது. போராடும் விவசாயிகளை மதிக்காத அரசு, இந்த அரசு.
விவசாயி சாவு இன்று செய்தி, ஆனால் அது நாளை நாம் உணவு இன்றி சாகப் போகின்றோம் என்பதற்கான முன் அறிவிப்பு. 11ஜி(11G) வரை செல்போன் வந்தாலும் கஞ்சி விவசாயி தான் ஊற்ற வேண்டும். இதை உணர்ந்து மக்கள் வாக்களிக்க வேண்டும்.
விவசாயிகளை மறந்து விடாமல் பசித்து உணவு உண்கின்ற ஒவ்வொருவரும் நன்றியுணர்வு என்று ஒன்று இருந்தால் தயவு செய்து விவசாயிக்கு வாக்களியுங்கள். இல்லையென்றால் சாப்பிடாமல் பட்டினி இருங்கள் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu