மகளிர் பிற்காப்பு இல்ல வளரிளம் பெண்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய கலெக்டர்

மகளிர் பிற்காப்பு இல்ல வளரிளம் பெண்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய கலெக்டர்
X

வளரிளம் பெண்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய கலெக்டர் குமாரவேல் பாண்டியன் 

வேலூர் அரசு மகளிர் பிற்காப்பு இல்லத்தில் தங்கியிருக்கும் வளரிளம் பெண்களுக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பொங்கல் பரிசுகள் வழங்கினார்

வேலூர் மாவட்டம் ஆபீசர்ஸ் லைன் அல்லாபுரம் பகுதியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் அரசு மகளிர் பிற்காப்பு இல்லம் செயல்பட்டு வருகிறது.

இந்த இல்லத்தில் தங்கியிருக்கும் வளரிளம் பெண்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன், பொங்கல் பரிசாக புத்தாடை, சால்வை, தட்டு, டம்ளர், இனிப்பு மற்றும் காரம் அடங்கிய தொகுப்புகளை பொங்கல் பரிசாக வழங்கி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன் மாவட்ட சமூக நல அலுவலர் உள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!