மனுக்களுக்கு 100 நாளில் தீர்வு- ஸ்டாலின்

திமுக ஆட்சி அமைந்தவுடன் 100 நாட்களுக்குள் பாெதுமக்கள் மனுக்கள் மீது தீர்வு காணப்படும் என வேலூரில் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா அருகே கந்தனேரி பகுதியில்,உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். நிகழ்ச்சியில் கோரிக்கை மனுக்களை பொது மக்களிடம் இருந்து பெற்ற அவர், கோரிக்கை மனு அளித்த 10 பேருக்கு பேச வாய்ப்பு அளித்தார். அப்போது பேசிய பொதுமக்கள் கல்விக்கடன் ரத்து,விவசாய கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அதற்கு பதில் அளித்து பேசிய ஸ்டாலின்,

கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் கூட தமிழகத்தில் நீட் தேர்வு இல்லை. அந்த வகையில் ஜெயலலிதாவை நான் பாராட்டுகிறேன். ஆனால் தற்போதைய அரசு, மத்திய அரசுக்கு அடிபணிந்து நீட் நேர்வை அனுமதித்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வுக்கு விலக்கு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் ,திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் முழுமையாக நடத்தப்படும்.

தற்போதைய அரசு இரண்டு முறை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியிருக்கிறது. அதன் நிலை குறித்து வெள்ளையறிக்கை கேட்டோம். ஆனால் இதுவரை வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை, என பேசினார். மேலும் திமுக ஆட்சி அமைந்தவுடன் 100 நாட்களுக்குள் பாெதுமக்கள் மனுக்கள் மீது தீர்வு காணப்படும் என தெரிவித்து பெட்டிக்கு பொதுமக்கள் முன்னிலையில் சீல் வைத்தார்.

Tags

Next Story