கூட்டுறவு வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.97லட்சம் பண மோசடி : பெண் மேலாளர் கைது

கூட்டுறவு வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.97லட்சம் பண மோசடி : பெண் மேலாளர் கைது
X
Vellore News Today -வேலூர் கூட்டுறவு வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் பண மோசடி செய்த பெண் மேலாளர் கைது செய்யப்பட்டார்.

Vellore News Today - மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயார்செய்து ரூ.97 லட்சம் மோசடி செய்த கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை குடியாத்தத்தில் உள்ளது. இந்த கிளையில் 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் மேலாளராக பணியாற்றியாவர் உமாமகேஸ்வரி (வயது 38). இவர்வேலை செய்த கால கட்டத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயார் செய்து ரூ.97 லட்சத்து 37 ஆயிரம் மோசடி செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதுகுறித்த புகார்கள் துறையின் உயர் அதிகாரிகளுக்குச் சென்றது. அந்த புகாரையடுத்து குடியாத்தம் கூட்டுறவு வங்கியில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. தணிக்கையின் முடிவில் உமாமகேஸ்வரி போலி ஆவணங்கள் மூலம் பணமோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

vellore news today-பெண் மேலாளர் கைது :

பெண் மேலாளர் உமாமகேஸ்வரியின் மோசடி உறுதியானதால் கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி, வேலூர் மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் அவரது குற்றம் உறுதியானதால் உமாமகேஸ்வரியை போலீசார் கைது செய்தனர்.

உமாமகேஸ்வரி தற்போது வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. கூட்டுறவு வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் முறைகேட்டில் ஈடுபட்ட பெண் மேலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil