வேலூர் நடைபாதை காய்கறி விற்பனைக்கு தடை: வியாபாரிகள் சாலை மறியல்

வேலூர்  நடைபாதை காய்கறி விற்பனைக்கு தடை: வியாபாரிகள் சாலை மறியல்
X

வேலூர் சைதாப்பேட்டை பகுதியில் நடைபாதை காய்கறி வியாபாரிகள், விற்பனைக்கு தடை விதித்ததால் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்

வேலூர் சைதாப்பேட்டை பகுதியில் நடைபாதை காய்கறி வியாபாரிகள், விற்பனைக்கு தடை விதித்ததால் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்

வேலூர் மாநகராட்சி பகுதியில் தோட்டப்பாளையம், குட்டைமேடு, சைதாப் பேட்டை, சத்துவாச்சாரி போன்ற பகுதிகளில் நடை பாதை காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது . கொரோனா ஊரடங்கு காரணமாக அவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது . இந்நிலையில் இன்று முதல் நடைபாதை வியாபாரிகள் வியாபாரம் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது .

அதன்படி வேலூர் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த காய்கறி வியாபாரிகள் இன்று காலை வியாபாரம் செய்ய வந்தனர். ஆனால் சைதாப் பேட்டை பகுதி சாலை மிகவும் குறுகிய பகுதியாக உள்ளதால் இங்கு வியாபாரம் செய்தால் சமூக இடை வெளி கேள்விகுறியாகி விடும். இடநெருக்கடியால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாக கூறி மாநகராட்சி ஊழியர்கள், இங்கு வியாபாரம் செய்ய அனுமதி கிடையாது என்று தடைவிதித்தனர் .

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 60க்கும் மேற்பட்ட நடை பாதை காய்கறி வியாபாரிகள் திடீரென காலை வேலூர் - ஆற்காடு சாலையில் உள்ள முருகன் கோயில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர் . இதையடுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது . தகவல் அறிந்த வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் . பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட வியாபாரிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் . இதையடுத்து வியாபாரிகள் சாலை மறியலை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வந்தனர் .

அப்போது , குறுகிய இடம் என்பதால் கொரோனா தொற்று பரவல் ஏற்படும் . அதற்காக அங்கு வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது . இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி உடனடியாக நடிவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் . இதையடுத்து வியாபாரிகள் கலைந்து சென்றனர் . இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!