வேலூர் சத்துவாச்சாரியில் திருட்டு: மர்ம ஆசாமிகள் கைவரிசை

வேலூர் சத்துவாச்சாரியில் திருட்டு: மர்ம ஆசாமிகள் கைவரிசை
X
வேலூர் சத்துவாச்சாரியில் ஓய்வு பெற்ற பெல் ஊழியர் வீட்டில் 30 சவரன் நகை, பணம் திருடு போயுள்ளது. திருட்டு மர்ம ஆசாமிகள் கைவரிசை

வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் டபுள்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பிச்சாண்டி( 65 ) . ஓய்வு பெற்ற பெல் ஊழியர் . இவரது வீட்டின் மூன்று போர்ஷன்களிலும் உறவினர்களே தனித்தனியாக வசித்து வருகின்றனர் . இந்நிலையில் தனது வீட்டில் தனது பெற்றோரை விட்டுவிட்டு பிச்சாண்டி தனது குடும்பத்துடன் சத்துவாச்சாரி ஸ்ரீராம் நகரில் உறவினர் வீட்டில் நடந்த துக்க நிகழ்வுக்கு காலை குடும்பத்துடன் சென்றார் . வீட்டில் அவரது வயதான தந்தை மட்டும் இருந்துள்ளார் .

துக்கநிகழ்வில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் தனது வீட் டுக்கு காலை 11.30 மணிக்கு திரும்பியுள்ளார். மாலை குடும்ப செலவுக்காக பணம் எடுக்க அறையில் இருந்த லாக்கரை அவரது மகளை விட்டு திறந்துள்ளார். அப்போது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 30 சவரன் தங்க நகைகள் , 70 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரிய வந்தது . இதனால் அதிர்ச்சியடைந்த பிச்சாண்டி கொடுத்த புகாரின் பேரில் சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து நேரில் விசாரணை நடத்தினர் .

தடயவியல் நிபுணர் களும் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுபற்றி வழக் குப்பதிவு செய்த சத்துவாச்சாரி போலீசார் நகை , பணம் திருடிச் சென்ற ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர் .

Tags

Next Story
சேந்தமங்கலத்தில் அதிர்ச்சி..! மின் மோட்டார் கம்பி திருட்டு சம்பவம்  போலீசாரின் விசாரணை..!