கோயில் பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக்க வேண்டும் : தமிழக அரசுக்கு கோரிக்கை
கோயில் பணியாளர்களை கொரோனா முன்கள பணியாளர்களாக அறிவிக்க கோரிக்கை எழுப்பிய கோயில் பணியாளர்கள்.
உணவு வழங்குதல் உட்பட துறைசார்ந்த பணிகளை மேற்கொள்ளும் கோயில் பணியாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் தமிழக அரசுக்கு கோரிக்கை கோயில் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா முன்களப்பணியாளர்கள் பட்டியலில் தங்களையும் சேர்க்க வேண்டும் என்று தமிழக கோயில் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக தமிழ் நாடு கோயில் நிர்வாக அதிகாரிகள் சங்க நிர்வாகிகள் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :
கொரோனா பெருந்தொற்று காலத்தில் செயல் அலுவலர்கள், கோயில் பணியாளர்கள் அரசின் உத்தரவின் பேரில் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தினசரி அன்னதான திட்டத்தின் கீழ் உணவு பொட்டலங்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் .
கொரோனா தொற்று ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கோயில்களில் அன்றாடம் நடைபெற வேண்டிய அனைத்து நிகழ்வுகள் பக்தர்கள் இன்றி நடந்து வருகிறது . அதே போல் 24 ம் தேதி முதல் அமலில் உள்ள தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கில் முன்களப்பணியார்களாக மருத்துவமனை ஊழியர்கள் காவல்துறை துப்புரவு மற்றும் பத்திரிகையாளர்கள், வருவாய்த்துறை உட்பட குறிப்பிட்ட அரசு துறைகளின் ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர் .
இந்நிலையில் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்குதல் , துறைரீதியான பணிகளுக்காக தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கும், அலுவலகங்களுக்கும் செல்லவேண்டிய நிலையில் அடையாள அட்டை காண்பித்தும், முன்களப்பணியாளர்கள் இல்லை என்ற காரணத்தால் காவல்துறையால் அனுமதி மறுக்கப்படும் சூழ்நிலை உள்ளது.
கொரோனா தொற்று அச்சம் நிலவும் நிலையிலும் மருத்துவமனைகளில் உணவு வழங்கும் பணியில் ஈடுபடும் நிலையில் 2 ஆயிரம் பேர் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் இறந்துள்ளனர். எனவே, கோயில் பணியாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். கொரோனாவால் இறந்த கோயில் பணியாளர்களுக்கு ரூபாய் 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆணையர் பொது நல நிதியில் இருந்து நிதியுதவி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu