ஓடும் காரில் பெண்களை தாக்கி நகை கொள்ளையடித்த டிரைவரை பிடிக்க தனிப்படை

ஓடும் காரில் பெண்களை தாக்கி நகை கொள்ளையடித்த டிரைவரை பிடிக்க தனிப்படை
X

நகை பறிகொடுத்த பெண்கள் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்

வேலூரில் ஓடும் காரில் 2 பெண்களை தாக்கி நகை கொள்ளையடித்த டிரைவரை பிடிக்க இரண்டு தனிப்படை அமைப்பு

சோளிங்கர் முருகரெட்டி தெருவை சேர்ந்தவர் சுஜாதா ( 45 ) , இவரும் சென்னையில் வசிக்கும் தனது உறவினர் சிவபூவனம்மாள் ( 65 ) இருவரும் குடியாத்தத்தில் உள்ள குல தெய்வ கோயிலுக்கு செல்ல நேற்று காலை சோளிங்கர் பஸ் நிலையம் அருகே நின்றிருந்தனர் . அப்போது அவ்வழியாக வந்த ஒரு அந்த டிரைவர் நான் பள்ளிகொண்டா வரை செல்கிறேன் உங்களை பள்ளிகொண்டாவில் இறக்கி விடுகிறேன் என்றார் .

கார் , வேலூரை கடந்தபோது டிரைவர் திடீரென சிவபுவனம்மாள் கழுத்தில் அணிந்து இருந்த நகைகளை பறித்துள்ளார் . கார் , பள்ளி கொண்டா அருகே சென்றபோது மீண்டும் கார் , வேலூரை நோக்கி வந்தது. சத்துவாச்சாரி மேம்பாலத்தை கடக்க முயன்ற போது , இரு பெண்களும் காரின் கண்ணாடியை தட்டியபடி கூச்சலிட்டனர் . அதற்குள் அந்த நபர், சிவபூவனத்தின் 10 சவரன் தங்க நகைகளை பறித்துக்கொண்டு இருவரையும் ஓடும் காரில் இருந்து தள்ளி விட்டுள்ளார் .

சம்பவம் குறித்து பெண்கள் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தனர். இது குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . மேலும் கார் கொள்ளையனை பிடிக்க எஸ்பி தனிப் பிரிவு , இன்ஸ்பெக்டர் தலைமையில் என 2 தனிப்படைகள் அமைத்து , வேலூர் - சோளிங்கர் வரை உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர் .

அந்த காரின் நம்பர் பிளேட் போலியானது என்பதால், போலீசார் வேலூர், பொன்னை, ஆற்காடு, உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக தேடி வருகின்றனர் .

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு