பணியின்போது மரணமடைந்த 2 போலீசார் குடும்பத்துக்கு நிவாரண உதவி

பணியின்போது மரணமடைந்த 2 போலீசார் குடும்பத்துக்கு நிவாரண உதவி
X
வேலூரில் உள்ள காவல் நிலையத்தில் பணியின்போது மரணமடைந்த காவலர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டது

வேலூர் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த செல்வராஜ், வடக்கு போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த மாலதி ஆகியோர் பணியின் போது மரணமடைந்தனர்.

அவர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக, மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார் மற்றும் அதிகாரிகள் தங்களின் பங்களிப்பாக மொத்தம் ரூ.10 லட்சத்து 20 ஆயிரத்து 650 அளித்தனர்.

இந்த தொகை இருவரின் குடும்பத்துக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று வேலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலத்துக்கு இரு குடும்பத்தினரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் அழைத்து அவர்களுக்கு நிவாரண தொகையை வழங்கினார்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!