தடுப்பூசி போட்டதால் தப்பித்தேன் - அமைச்சர் துரைமுருகன் பேச்சு

தடுப்பூசி போட்டதால் தப்பித்தேன் - அமைச்சர் துரைமுருகன் பேச்சு
X

அமைச்சர் துரைமுருகன்

2 தடுப்பூசியை போட்டதால் தான் கொரோனா மீண்டும் தாக்கிய போதும் உயிர் பிழைத்ததாக அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

வேலூர் வாணியர் வீதியில் ஜெயின் சங்கம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போடும் முகாம் தொடங்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் 1,93,915 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசு வழங்கும் இந்த இலவச தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். இதனை போட்டால் செத்து போய்விடுவோம் என்று நினைக்கிறார்கள்.

அது தவறானது. நான் 2 தடுப்பூசியை போட்டதால் தான் மீண்டும் என்னை கொரோனா தாக்கிய போதும் உயிர் பிழைத்தேன்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் தடுப்பூசி போட்டுகொண்டதால் கொரோனாவை அவர்கள் வெற்றிகொண்டுள்ளனர். ஆனால் இங்கே தவறான தகவலால் தடுப்பூசி போட்டு கொள்ள அஞ்சுகிறார்கள். தடுப்பூசி போட்டு கொண்டு உங்களையும் சமுதாயத்தையும் காத்து கொள்ளுங்கள். அப்போது தான் கொரோனாவை நாம் முழுமையாக ஒழிக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!