வேலூர் அருகே பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

வேலூர் அருகே பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
X
வேலூர் அருகே ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

சத்துவாச்சாரியை அடுத்த புதுவசூர் அருள்ஜோதி நகரை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி பிரேமா (வயது 57). இவர் தீர்த்தகிரி முருகன் கோவில் மலையடிவாரப் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் சென்ற மர்மநபர் திடீரென பிரேமா கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரேமா திருடன், திருடன்என கூச்சலிட்டார். எனினும் அந்த நபர் அங்கிருந்து மின்னல்வேகத்தில் தப்பிச் சென்று விட்டார்.

இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைவு..! விவசாயிகளின் கவலை அதிகரிப்பு..!