வேலூர் மாவட்டத்தில் 21 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது

வேலூர் மாவட்டத்தில் 21 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது

வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் கொரோனோ பாதிப்பு குறித்து நிருபர்களிடம் பேட்டியளித்தார்.

வேலூர் மாவட்டத்தில் கொரோனோ பாதிப்பு குறைய முழு ஊரடங்கு நல்ல பலன் அளித்துள்ளது. தற்போது 200-க்கு கீழ் கொரோனோ பாதிப்பு குறைந்து வருகிறது.

கொரோனோ தொற்றின் 3-வது அலையை எதிர்கொள்ள வேலூர் மாவட்டம் நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. கொரோனோ தொற்றின் 3-வது அலை செப்டம்பர் மாதத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. அதனை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனோ 3-வது அலை 14 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை பாதிக்கும் என கூறப்படுவதால், இதனை தடுக்க வேலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் பிரிவு துறைத்தலைவர் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்கள், வேலூர் தனியார் மருத்துவமனை குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்கள் மற்றும் தமிழ்நாடு குழந்தைகள் நல மருத்துவ சங்கத்தினருடன் ஓரிரு நாளில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.

மேலும் வெளியூரில் உள்ள குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்களுடன் ஆன்லைன் மீட்டிங் மூலம் ஆலோசனை நடத்தப்படும்.

14 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் கண்டிப்பாக கொரோனோ தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 14 வயதுக்கு கீழ்உள்ளோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் போது அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது பெற்றோர்களே. அப்போது பெற்றோர்களுக்கு கொரோனோ தொற்று பாதிப்பு ஏற்படக்கூடாது. ஆகவே பெற்றோர்கள் கண்டிப்பாக தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும்.

வேலூர் மாவட்டத்தில் கொரோனோ தடுப்பூசி 21 சதவீதம் பேர் போட்டுக்கொண்டுள்ளனர். தமிழக அளவில் வேலூர் மாவட்டம் தடுப்பூசி போட்டுக்கொண்டதில் 4-வது இடமும், மாநகராட்சியில் வேலூர் மாநகராட்சி 3-வது இடம் வகிக்கிறது.

கொரோனோ தடுப்பூசி வந்தவுடன் உடனுக்குடன் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. தொற்று குறைந்துவிட்டது என அலட்சியமாக இருக்கக்கூடாது முழுவதும் குறைந்தாலே பாதுகாப்பானது, கொரோனோ தொற்று பாதிப்பு தலைக்கு மேல் இருக்கும் கத்தி போன்றது பொதுமக்கள் கொரோனோ தொற்று குறைந்தாலும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். தேவையின்றி வெளியில் சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும் என்றார்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!