வேலூர் மாவட்ட விவசாயிகளுக்கு தாட்கோ மூலம் மானியம்
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் (வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர்) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த விவசாயிகளுக்கு தாட்கோ மூலம் பி.வி.சி.குழாய் வாங்குவதற்கு ஒரு நபருக்கு ரூ.15000 மானியமும் மற்றும் மின் மோட்டார் வாங்குவதற்கு ரூ.10000 மானியமும் வழங்கப்படும்.
இந்த திட்டங்களில் பயன்பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள், விவசாயத்தை தொழிலாக கொண்டவராக இருக்க வேண்டும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்,
சாதி சான்றிதழ், குடும்ப அட்டை, இருப்பிட சான்று, பட்டா, சிட்டா, அடங்கல், புலப்பட வரைபடம், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட விலைப்புள்ளி ஆகிய ஆவணங்களுடன் http://application.tahdco.com என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தாட்கோ மூலம் நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்பாட்டு திட்டம், துரித மின் இணைப்பு திட்டத்தில் பயனடைந்தவர்களும் மற்றும் விண்ணப்பித்து நிலுவையில் உள்ளவர்களும் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்
மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர், தாட்கோ, நெ.153 / 1, கோவிந்தராஜ் தெரு, ஆதிதிராவிடர் மாணவர் விடுதி வளாகம், ஓட்டேரி, வேலூர் 632 002. செல்: 9445029483 தொடர்பு கொள்ளலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu