வேலூர் மாவட்டத்தில் அரசு, நிதியுதவி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது

வேலூர் மாவட்டத்தில் அரசு, நிதியுதவி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது
X

வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் ​அரசு, நிதியுதவி பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தொடங்கியது

வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் அரசு, நிதியுதவி பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தொடங்கியது

வேலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இன்று தொடங்கியது . கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு தமிழகத்தில் பள்ளி , கல்லூரிகள் மூடப்பட்டன . இதையடுத்து , ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வந்தது . இதற்கிடையில் , கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை 9 முதல் 12 ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு வரவழைத்து மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டது . இந்நிலையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்ததை தொடர்ந்து பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது .

இந்த கல்வி ஆண்டிற்கு பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கான நடவடிக்கை இன்று முதல் மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்தது. அதன்படி , வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கைக்காக பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது . பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பள்ளிக்கு வந்தனர் . பிளஸ் 1 சேர்க்கைக்கு வரும் மாணவர்கள் விரும்பும் பாடப்பிரிவுகளை வழங்கும் பணிகள் நடந்தது .

இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில் தமிழகத்தில் இந்தாண்டு கொரோனா தொற்றின் காரணமாக மாணவர் சேர்க்கை முறையாக நடைபெறவில்லை . வரும் 21 ம் தேதியிருந்து பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது . மற்ற வகுப்புகளுக்கும் , மாணவர்களை சேர்ப்பு சத்துணவு சாப்பிடக்கூடிய மாணவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் பணியும் தொடங்க உள்ளது . இதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது .கடந்த ஆண்டைபோல கூடு தலாக மாணவர் சேர்க்கை நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது . பள்ளி கல்வித்துறை மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து பெற்றோர்களுக்கு வீடு வீடாக சென்று எடுத்துரைக்க வேண்டும் . ஒவ்வொரு பள்ளியிலும் சேர்க்கை விதிகதம் அதிகரிக்க அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது .என்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!