வேலூர் மாவட்டத்தில் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

வேலூர் மாவட்டத்தில் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
X

வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன்

வேலூர் மாவட்டத்தில் 880 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை நடக்கிறது என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்

பொதுமக்கள் தடுப்பூசி போடுவது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கையால் தொற்று பாதிப்பு குறைந்து உள்ளது. மாநிலம் முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 880 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு ஒரேநாளில் 90 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அமைப்புகள் ஆகிய அனைத்து பகுதிகளிலும் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதியின் அருகே நடைபெறும் தடுப்பூசி முகாமிற்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை காலை 7 முதல் இரவு 7 மணி வரை நடைபெறும். இந்த முகாமினை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி வேலூர் மாவட்டத்தை 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்ட மாவட்டமாக உருவாக்கிட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறி உள்ளார்.

Tags

Next Story