வேலூரில் நாளை முதல் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்

வேலூரில் நாளை முதல் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்
X
வேலூர் மாவட்டத்தில் நாளை முதல் 1&ந்தேதி வரை பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

மத்திய அரசின் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் உழவர்களின் பங்களிப்பே நமது முன்னுரிமை எனும் சிறப்பு முகாம் மாவட்டம் முழுவதும் வரும் 24.04.2022 முதல் 01.05.2022 வரை கிராம ஊராட்சி வாரியாக நடைபெற உள்ளது.

இந்த முகாம்களில் இதுவரை விவசாய கடன் அட்டை பெறாத விவசாயிகள், விவசாயம் மற்றும் பால் பண்ணை, கால்நடை பராமரித்தல், மீன் வளர்ப்பு போன்ற விவசாயம் சார்ந்த தொழில்களை மேற்கொள் வோர் விவசாய கடன் அட்டை பெற்று பயனடையலாம்.

விவசாய கடன் அட்டை மூலம் வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த தொழில்களுக்கு ஏற்றவாரு ரூ.1.6 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

இக்கடனுக்கான வட்டி விகிதம் 7 சதவீதம். குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் முறையாக திரும்ப செலுத்தும் நிலையில் 3 சதவீத வட்டி மானியமாக பெறலாம்.

மாவட்டத்தில் வேளாண் கூட்டுறவு வங்கிகள், தேசியமய மாக்கப்பட்ட வங்கிகளின் மூலம் மாவட்டத்தில் 45,500 எண்ணிக்கையிலான விவசாய கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாவட்டத்தில் விடுபட்டுள்ள சுமார் 12,852 திட்ட பயனாளிகள் மேற்படி கிராம ஊராட்சிகள் வாரியாக நடைபெறும் சிறப்பு முகாம்களில் பங்கேற்று உரிய ஆவணங்களை விண்ணப்பம், ஆதார் அட்டை, சிட்டா பட்டா, அடங்கல், வங்கி கணக்குப் புத்தகம், பான் கார்டு) அளித்து விவசாய கடன் அட்டை பெற்றுகொள்ளலாம்.

மேலும், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இயற்கை பேரிடர்களினால் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் நடப்பு காரீப் பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் அனைவரும் தங்கள் சாகுபடி செய்யும் பயிர்களை காப்பீடு செய்து பயன்பெறலாம்.

இயற்கை இடர்பாடுகளான பெருமழை, வெள்ளம், வறட்சி, புயல் / சூறாவளி, மோசமான வானிலை மாற்றம் ஆகிய பல்வேறு இயற்கை இடர்பாடுகளின் தாக்கத்திலிருந்து மீண்டு உரிய நிவாரணம் பெற விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன் பெற்றிடலாம்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!