எங்க ஊரு ஹீரோயின் - வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு அளிக்கும் பட்டதாரி பெண்மணி

எங்க ஊரு ஹீரோயின் - வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு அளிக்கும் பட்டதாரி பெண்மணி
X
வேலூர் மாவட்டம் அணை கட்டு- எங்க ஊரு ஹீரோயின் - வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்து வாழ்வு கொடுக்கும் பொறியியல் பட்டதாரி பெண்

எங்க ஊரு ஹீரோயின் - வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்து வாழ்வு கொடுக்கும் பொறியியல் பட்டதாரி பெண்

வேலூர் மாவட்டம் அணை கட்டு தாலுகா புதுார் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு , அருனாதேவி தம்பதியினர். பாபு முன்னாள் எல்லை பாதுகாப்பு படைவீரர் ஆவார், தற்போது விவசாயம் செய்து வருகிறார். இந்த தம்பதியருக்கு பிருத்விராஜ், தளபதி,என்ற பிள்ளைகளும் ஓவியா என்ற மகளும் உள்ளனர். மூன்றுபேரும் பட்டதாரிகள் ஆவர். இந்த குடும்பம் நாள் ஒன்றுக்கு சுமார் 120-க்கும் மேற்ப்பட்ட நாய்களுக்கும் 50-க்கும் மேற்ப்பட்ட குரங்களுக்கு அவற்றின் இருப்பிடம் தேடி உணவு அளித்து வருகின்றனர்.

இது கூறித்து குடும்ப தலைவி அருணாதேவி செய்தியாளர்களிடம் பேசும் பொழுது,

கடந்த மூன்று வருடங்களாக நாங்கள் இந்த சேவையை செய்து வருகிறோம். இந்த சேவைக்கு காரனமாக அமைந்தது ஒரு நாய் விபத்து ஒன்றில் எங்கள் கண் முன்னால் துடிக்க துடிக்க இறந்து விட்டது. அன்றிலிருந்து எங்கள் பகுதியில் எந்த நாய் அடிப்பட்டாலும், அல்லது ஆதரவற்று இருந்தாலும் நோய் தாக்கியதால் வளர்த்தவர்கள் கைவிட்டு விட்டாலும் நாங்கள் கொண்டு வந்து வளர்த்து வருகிறோம்.

தற்போது 25 நாய்கள் எங்கள் வீட்டில் உள்ளது. நாள் ஒன்றுக்கு 12 கிலோ அரிசி, 3 கிலோ கோழி இறைச்சி, 8 லிட்டர் பால் கொண்டு சமையல் செய்து வீட்டு நாய் மற்றும் எங்கள் பகுதியில் உள்ள தெருநாய்கள் 100-க்கும் மேற்பட்டோர்க்கு உணவு அளித்து வருகிறோம். இதேபோல கொரோனா காலத்தில் காட்டில் உள்ள குரங்களுக்கு உணவு கிடைக்காது என்பதை கருத்தில் கொண்டு தினமும் காட்டிற்கு சென்று குரங்களுக்கு பழங்கள் மற்றும் சைவ உணவு அளித்து வருகிறோம்.

நாள் ஒன்றுக்கு 2000 ரூபாய் வரை செலவாகின்றது. நன்கொடைகள் எதுவும் வாங்குவது இல்லை. எங்க குடும்ப வருவாயிலே இதை நாங்கள் செய்கின்றோம். இந்த தருணத்தில் அரசுக்கு நாங்கள் தரும் கோரிக்கை எங்கள் வீட்டில் தற்போது இடபற்றாக்குறை உள்ளது. அரசு எங்களுக்கு ஒரு இடம் ஒதுக்கி கொடுத்தால் இன்னும் நிறைய நாய்களை தத்து எடுத்து வளர்ப்போம் , உணவுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை, அது எங்கள் நிலத்திலே கிடைத்து விடுகிறது என்றார் பெருமிதத்தோடு.


பட்டாதாரி பெண் ஓவியா பேசும்பொழுது..

எங்கள் அம்மாவை பார்த்து நான், அப்பா மற்றும் என் அன்னன் தம்பி மற்றும் உறவினர் அனைவரும் இந்த சேவையை செய்து வருகிறோம்.எங்கள் பகுதியில் எங்கு நாய்கள் நோயுற்று இருந்தாலோ, அல்லது அடிபட்டு இருந்தாலோ 8248147836, என்ற நம்பருக்கும் jerryje63@gmail.com என்ற முகவரியில் எனக்கு தகவல் அளித்தால் என் செலவில் அவற்றிக்கு முதலுதவி செய்து காப்பாற்றுவேன் என்றார்.

ஒரு குடும்பத்தின் தலைவர் வருமானம் மற்றும் பிள்ளைகளின் வருமாணம் அனைத்தும் இந்த ஐந்தறிவு ஜீவன்களுக்கு செலவழிக்கபடுவது உண்மையிலே நம்மை பிரமிக்கவைக்கிறது.

பெற்றோர்களுக்கு உணவு போடாத பிள்ளைகள், ஊனத்தோடு பிறந்த பிள்ளைகளை குப்பை தொட்டியில் போடும் பெற்றோர்கள் இருக்கும் இந்த காலத்தில், ஊனமுற்ற நாய்களை பாராமரித்து அவைகளை குழந்தை போல் தூக்கி வந்து சிறுநீர் கழிக்க வைத்து கால் கழுவிவிட்டு சோறு ஊட்டும் இந்த மனித குல மாணிக்கங்களை போற்றி, மழை பெய்வதும், பூமி தாய் நம்மை இன்னும் தாங்குவதும் இது போன்ற மனிதர்களால் என்று நம்புவோமாக.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself