தீபாவளி பண்டிகை: வேலூர் கடை வீதிகளில் கூட்டம் அலைமோதல்

தீபாவளி பண்டிகை:  வேலூர் கடை வீதிகளில் கூட்டம் அலைமோதல்
X
போக்குவரத்து நெரிசலை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை, மக்கள் கூடும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு

தீபாவளி பண்டிகை வருகிற 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் வேலூர் கடை வீதியில் பொதுமக்கள் தற்போதே அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.

குறிப்பாக ஜவுளிக்கடையில் தங்களுக்க பிடித்த ஆடைகளை தேர்வு செய்து வாங்கி செல்கின்றனர். இதனால் வேலூர் அண்ணா சாலை, பி.எஸ்.எஸ். கோவில் தெரு, லாங்குபஜார், நேதாஜி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

ஜவுளி கடைகளில் பெண்களுக்கு தேவையான சேலை, சுடிதார், ஆண்களுக்கான பேண்ட், சர்ட், குழந்தைகளுக்கான ஆடை, வேஷ்டி, துண்டு, டவல், பனியன் உள்ளிட்ட வைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மார்க்கெட்டில் மளிகை மற்றும் பூஜை பொருட்கள் வாங்கவும் கூட்டம் அலைமோதுகிறது.

வேலூர் மாநகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலை சீர்செய்யவும், திருட்டு சம்பவங்களை தடுக்கவும் மாநகர காவல்துறையினர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதற்காக மக்கள் கூடும் முக்கிய இடங்களில் தீவிரமாக கண்காணி க்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!