பிளஸ் 2 துணைத்தேர்வு: வேலூரில் 311 தனித்தேர்வர்கள் எழுதினர்
பிளஸ் 2 துணைத்தேர்வு தொடங்கியது
தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனை வரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது . இவர்களுக்கு 10 , பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 செய்முறை தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டு தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை 19 ம்தேதி வெளியானது.
இந்த நிலையில் ஏற்கனவே அரசு அறிவித்த படி தனித்தேர்வர்களுக்கு பிளஸ் 2 தேர்வு இன்று தொடங்கி வரும் 19 ம்தேதி வரை நடக்கிறது . முதல் நாளான இன்று தமிழ் உட்பட முதல் தாள் தேர்வுகள் நடந்தது.
வேலூர் மாவட்டத்தில் கொணவட்டம் அரசினர் மேல்நிலைப்பள்ளி, வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி , ஊரீசு மேல்நிலைப்பள்ளி , முஸ்லீம் அரசினர் மேல் நிலைப்பள்ளி உட்பட 8 மையங்களில் நடந்தது. மாவட்டத்தில் தமிழ் உட்பட முதல் தாள் தேர்வுக்கு 444 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 311 பேர் தேர்வு எழுதினர். 133 பேர் ஆப்சென்டாகினர்.
வேலூரில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், கல்வித்துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தேர்வு அறைகளில் அரசின் கொரோனா தடுப்பு விதிகளின்படி மாணவர்கள் உரிய இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டிருந்தனர். மேலும் தேர்வு மையங்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu