ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தல், ஒருவர் கைது

ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தல், ஒருவர் கைது
X

ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்திய மதுரையை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்

காட்பாடி அருகே ஆந்திராவிலிருந்து 10 கிலோ கஞ்சா கடத்திய மதுரையை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்

காட்பாடி அடுத்த தமிழக-ஆந்திர எல்லையான கிருஷ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு குற்றப்புலனாய்வு துறை டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான காவலர்கள் , இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து வந்த தனியார் பேருந்தை சோதனை செய்ததில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அடுத்த அனக்கப்பள்ளி கிராமத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

பின்னர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த திரளி கிராமத்தை சேர்ந்த சீத்தாராமன் (59) என்பவரை கைது செய்தனர்

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்