வேலூர் மாவட்டம் காட்பாடியில் 40.2 மி.மீ மழை பதிவானது

வேலூர் மாவட்டம் காட்பாடியில் 40.2 மி.மீ மழை பதிவானது
X

வேலூரில் மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள்

வேலூர் மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக காட்பாடியில் 40.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது

வேலூர் மாவட்டத்தில் நேற்று இரவு 3வது நாளாக தொடர்ந்து இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது . தொரப்பாடியில் மரம் முறிந்து விழுந்ததால் மின் தடை ஏற்பட்டது . காட்பாடியில் 40.2 மி.மீ. மழை பதிவானது .

வேலூர் உட்பட வடமாவட்டங்களில் பலத்தமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதற்கேற்ப வேலூர் மாவட்டத்தில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்தது. கடந்த 3 நாட்களில் நேற்று முன்தினம் வேலூர் மற்றும் சுற்றுப்புறங்கள் தவிர்த்து பிற இடங்களில் லேசான மழை பெய்தது.

அதேநேரத்தில் மாவட்டத்தில் பரவலாக 3வது நாளாக நேற்றும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. நேற்று இரவு தொடங்கி இன்றுகாலை 8 மணி வரை உள்ள நிலவரப்படி மாவட்டத்தில் மொத்தம் 146 மி.மீ மழை பதிவானது. சராசரி மழை அளவு 24.43 மி.மீ. மிக அதிகபட்சமாக மாவட்டத்தில் காட்பாடியில் 40.2 மி.மீ பதிவானது.

வேலூர், காட்பாடி மற்றும் சுற்றுப்புறங்களில் பெய்த இடியுடன் கூடிய பலத்த மழை காரணமாக வேலூர் அடுத்த தொரப்பாடி சித்தேரியில் சாலையோர புளிய மரம் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்தது . இதில் ஆங்காங்கே மின் கம்பிகள் அறுந்து விழுந்தன . இதனால் தொரப்பாடி, சித்தேரி, அரியூர், பென்னாத்தூர் பகுதிகளில் இன்று அதிகாலை மின் தடை ஏற்பட்டது. அதே போல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மற்றபடி வேறு எந்த சேதம் குறித்தும் தகவல் இல்லை என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் .

மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் : குடியாத்தம் 6 , மேலாலத்தூர் 23 , பொன்னை 28.6 , வேலூர் 28.8 , கூட்டுறவு சர்க்கரை ஆலை 20

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்