காட்பாடி அடுத்த வஞ்சூர் கிராமத்தில் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்
ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்ட வஞ்சி அம்மன்
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வஞ்சூர் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை ஸ்ரீ வஞ்சியம்மன் ஆலயம் உள்ளது இந்த ஆலயத்தில் ஆடி மூன்றாவது வெளியான இன்று உலகையே அச்சுறுத்தி ஆட்டிப் படைத்து வரும் கொரோனா நோய் தொற்றில் இருந்து பொதுமக்கள் அனைவரும் விடு பெற வேண்டி இன்று கிராம தேவதை ஸ்ரீ வஞ்சி அம்மனுக்கு நான்கு லட்ச ரூபாய் மதிப்பில் 20 ரூபாய் 50 ரூபாய், 100 ரூபாய், 200 ரூபாய், 500 ரூபாய், நோட்டுகளால் கிராம தேவதை ஸ்ரீ வஞ்சி அம்மனுக்கு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தமிழகத்திலேயே கிராம தேவதை ஸ்ரீ வஞ்சியம்மன் குழந்தை ரூபத்தில் அவதரித்து இருப்பது இந்த ஆலயத்தில் மட்டும்தான் என்றும், மேலும் அம்மன் கோவில்களிலே வஞ்சி அம்மனுக்கு மட்டும் தான் காவடி பொதுமக்கள் எடுப்பதும் உண்டு என்றும் கூறினார்கள்.
மேலும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற தங்களின் உடல் தசையை காணிக்கையாக அம்மனுக்கு செலுத்தி வருவதாகவும், வேண்டும் வரங்களை நிறைவேற்றும் சக்தி ஸ்ரீ வஞ்சியம்மனுக்கு உள்ளது என அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
தற்பொழுது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்கள் பக்தர்கள் கோவிலுக்கு உள்ளே செல்லாமல் வெளியே நின்று அம்மனை தரிசனம் செய்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu