வழிப்பறி தொடர்பாக குடியாத்தம் விசிக செயலாளர் உட்பட 2 பேர் கைது

வழிப்பறி தொடர்பாக  குடியாத்தம் விசிக  செயலாளர் உட்பட 2 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட விடுதலை சிறுத்தை கட்சி செயலாளர் வேதாசலம் மற்றும் ஆட்டோ டிரைவர் முகமது பாஷா

வழிப்பறி செய்ததாக விடுதலைச் சிறுத்தை கட்சி குடியாத்தம் தொகுதி செயலாளர் உட்பட 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை

வேலூர் மாவட்டம் குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதியில் கை உறை தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருபவர் யூனூஸ் நபில் (23) என்பவர் இவர் நேற்று இரவு தனது குடோனுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு செல்ல திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது பேரணாம்பட்டு அருகே விடுதலை சிறுத்தை கட்சி செயலாளராக உள்ள வேதாசலம் (41) என்பவர் தனது கூட்டாளிகளான ஆட்டோ டிரைவர் முகமது பாஷா (31)மற்றும் குமரேசன் ஆகியோருடன் சேர்ந்து யூனூஸ் நபில்யை வழிமறித்து மிரட்டி அவரிடமிருந்த 400 ரூபாயை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.

மேலும் இது குறித்து பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் யூனூஸ் நபில் புகார் கொடுத்தார், புகாரின் பேரில் பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வேதாச்சலம் மற்றும் அவரது கூட்டாளியான ஆட்டோ டிரைவர் முகமது பாஷா ஆகிய இருவரை கைது செய்து குடியாத்தம் சப் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

மேலும் தலைமறைவாக உள்ள குமரேசன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர், வழிப்பறியில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் குடியாத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!