குடியாத்தத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய்

குடியாத்தத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய்
X
குடியாத்தத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் என உயர்ந்துள்ளது.

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்று ரூ.100.68 பைசாவாகவும், டீசல் ஒரு லிட்டர் விலை ரூ.94.66 பைசவாகவும் இருந்தது. ஆனால் சற்று உயர்ந்து பெட்ரோல் ரூ.100.99 பைசாவுக்கும், டீசல் ரூ.94.90 பைசாவுக்கும் விற்பனையாகிறது.

இந்த விலை ஏற்றத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!