பேரணாம்பட்டு அருகே கோவிலில் வைத்திருந்த அம்மன் சிரசு திருட்டு

பேரணாம்பட்டு அருகே கோவிலில் வைத்திருந்த அம்மன் சிரசு திருட்டு
X
பேரணாம்பட்டு அருகே கோவிலில் வைத்திருந்த அம்மன் சிரசு திருட்டு

பேரணாம்பட்டு அடுத்த எம்.வி.குப்பம் கிராமத்தில் பழமையான கெங்கையம்மன் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் அம்மன் சிரசு ஊர்வலத்துடன் திருவிழா நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கிராம மக்கள் வருகிற ஜூலை மாதம் 16-ந் தேதி திருவிழா நடத்த முடிவு செய்து திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

இந்த நிலையில் மற்றொரு தரப்பை சேர்ந்த சிலர் கோவில் தங்களுக்கு சொந்தமானது என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், ஆதலால் அவர்கள் திருவிழாவை நடத்த உள்ளதாகவும், அதற்கு அனுமதி வழங்க கோரி மேல்பட்டி போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அனுப்பியிருந்தனர்.

இதனையறிந்த கிராம மக்கள் கெங்கையம்மன் கோவிலில் இருந்த கெங்கையம்மன் சிரசை கடந்த ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்புக்காக எடுத்து சென்று அருகிலுள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலில் வைத்திருந்தனர். ஆதிபுரீஸ்வரர் கோயிலில் வைக்கப்பட்டிருந்த அம்மன் சிரசு திடீரென காணாமல் போனது தெரிய வந்தது. இதனால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மர்ம ஆசாமிகள் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று அம்மன் சிரசை திருடி செல்லும் காட்சிகள் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இது குறித்து எம்.வி.குப்பம் கிராம மக்கள் மேல்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். மேலும் மற்றொரு தரப்பினரும் புகார் கொடுத்தனர். இரு தரப்பினர் அளித்த புகார்களின் பேரில் மேல்பட்டி சப்- இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா