குடியாத்தம் அருகே புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் அடிக்கல் நாட்டுவிழா

குடியாத்தம் அருகே புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் அடிக்கல்  நாட்டுவிழா
X

குடியாத்தம் அருகே புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் அடிக்கல் நாட்டுவிழா

குடியாத்தம் அடுத்த மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடம் கட்ட பூமி பூசையும் அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது

குடியாத்தம் அடுத்த மேல்பட்டி பகுதியில் மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜன் விகாஷ் கார்யக்ரம் திட்டத்தின் மூலம், ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தி 30 படுக்கைகள் கொண்ட கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்து பூமி பூசையும் அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. குடியாத்தம் சட்ட மன்ற உறுப்பினர் அமுலு மற்றும் வருவாய் கோட்டாட்சியர், வருவாய்துறையினர், பொதுப்பணிதுறையினர் பங்கேற்றனர்.

கட்டிடத்திற்கு பூசை செய்யப்பட்ட செங்கல்லை மாவட்ட ஆட்சியர் எடுத்து கொடுக்க அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் சட்ட மன்ற உறுப்பினரும் அவரை தொடர்ந்து அரசு அதிகாரிகளும் செங்கல்லை எடுத்து கொடுத்தனர். பின்னர் இந்த கட்டிடம் விரைவாகவும் தரமாகவும் கட்டி முடிக்க மாவட்ட ஆட்சியர் வாழ்த்து கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!