/* */

நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பலி

குடியாத்தம் அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பலி. தீயணைப்பு துறையினர் சடலமாக மீட்டனர்

HIGHLIGHTS

நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பலி
X

கிணற்றில் மூழ்கி இறந்த மாணவன் ஆகாஷ்

குடியாத்தம் அடுத்த சாமியார் மலை பகுதியை சேர்ந்த ஆகாஷ் (வயது 20) இவர் ஈரோட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்து வருகிறார்

இதனிடையே இவர் நேற்று மதியம் நண்பர்கள் சிலருடன் அதே பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது நீரில் மூழ்கி ஆகாஷ் மூழ்க்கியுள்ளான் இதனால் ஆகாஷுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது உடனடியாக நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் நீருக்கடியில் சேற்றில் சிக்கியுள்ளார்

உடனடியாக குடியாத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் தீயணைப்பு துறையினர் நேற்று இரவு வரை தேடியும் உடல் கிடைக்காததால் தேடுதல் பணியை நிறுத்தி வைத்தனர். மீண்டும் இன்று அதிகாலையில் இருந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் 12 மணி நேர போராட்டத்திற்கு பின்பு ஆகாஷ் சடலமாக மீட்கப்பட்டார்

மேலும் உடற்கூறு ஆய்வுக்காக சடலத்தை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மேலும் இது குறித்து குடியாத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்லூரி மாணவன் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Updated On: 12 July 2021 12:02 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  3. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  4. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  5. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  6. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழில் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
  8. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  9. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  10. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?