வனப்பகுதியை ஒட்டிய மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

வனப்பகுதியை ஒட்டிய மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை
X

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட் அருகே சிறுத்தை கடித்து கன்றுகுட்டி உயிரிழந்துள்ள நிலையில் வனப்பகுதியை ஒட்டியுள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க கோரி தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டை அடுத்த எருக்கம்பட்டு பகுதியை சேர்ந்தவர்கள் லஷ்மி-பாண்டுரங்கன் தம்பதியினர். இவர்களுக்கு சொந்தமான நிலம் நாயக்கனேரி பீட் மற்றும் காப்புகாடு அருகே உள்ளது. இதில் மாட்டு கொட்டகை அமைத்து அதில் மாடுகளை கட்டி வந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை அங்கு சென்று பார்த்த போது சுமார் ஒன்னரை வயதுடைய கன்றுகுட்டி ஒன்றை சிறுத்தை அடித்து கொன்றுள்ளது தெரியவந்தது.

இது குறித்து பேர்ணாம்பட் வனச்சரகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஆய்வு செய்து, உயிரிழந்த கன்றுகுட்டியை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். வனப்பகுதியை ஒட்டியுள்ள மக்கள் இரவில் வெளியே வரவேண்டாம் என்றும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!