வேலூர் நகரில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ரூ.36 ஆயிரம் அபராதம்

வேலூர் நகரில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ரூ.36 ஆயிரம் அபராதம்
X
பைல் படம்
வேலூர் நகரில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் அபராதமாக ரூ 36 ஆயிரத்தை போக்குவரத்து போலீசார் விதித்தனர்.

வேலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் நேற்று கிரீன்சர்க்கிள், காமராஜர் சிலை சந்திப்பு, ஆற்காடுசாலை, அண்ணாசாலை, கலெக்டர் அலுவலகம் அருகே உள்பட பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி ஓட்டுனர் உரிமம், தகுதிச்சான்று புதுப்பித்தல், வாகன சான்று உள்ளதா என்றும், ஹெல்மெட், சீட்பெல்ட் அணிந்துள்ளார்களா என்றும் சோதனை செய்தனர்.

இதில், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியது, தடை விதிக்கப்பட்ட இடத்தில் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தியது,

அதிக பாரம், மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணித்தது, ஓட்டுனர் உரிமம் இல்லாது உள்பட பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறியதாக 288 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக ரூ.36,600 அபராதம் விதிக்கப்பட்டது. என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!