ஊரக உள்ளாட்சி தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண் மற்றும் வாட்ஸ்அப் அறிமுகம்
மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி வேலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது.
முதற்கட்டமாக 06.10.2021 அன்று குடியாத்தம், கே.வி.குப்பம், காட்பாடி மற்றும் பேர்ணாம்பட்டு ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களிலும், இரண்டாம் கட்டமாக 09.10.2021 அன்று அணைக்கட்டு, கணியம்பாடி மற்றும் வேலூர் ஊராட்சி ஒன்றிங்களிலும் ஊராட்சிமன்ற உறுப்பினர்கள், ஊராட்சிமன்ற தலைவர். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளது.
இத்தேர்தலுக்காக 15.09.2021 முதல் "ஊரக உள்ளாட்சி தேர்தல் கட்டுப்பாட்டு அறை" ஒருங்கிணந்த ஊரக வளர்ச்சி அலுவலக முதல் மாடியில் துவங்கப்பட்டுள்ளது. தேர்தல் குறித்து பொதுமக்கள் தகவல்கள் ஏதும் அளிக்க வேண்டியிருப்பின் அவற்றை பின்வரும் கட்டணமில்லா தொலைபேசி மற்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்த சேவைகளை பயன்படுத்திக்கொள்ள
கட்டணமில்லா தொலைபேசி எண்18004253662
வாட்ஸ் அப் செயலி எண் 7402606593
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu