வேலூர் மாவட்டத்தில் இன்று 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

வேலூர் மாவட்டத்தில் இன்று 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது
X
வேலூர் மாவட்டத்தில் இன்று 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மாவட்டத்திற்கு 5 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளது

தமிழகத்தில் கொரோனா 2 வது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது . அதற்கேற்றார் போல் மருத்துவமனைகளில் படிப்படியாக கொரோனா வார்டுகள் காலியாகி வருகின்றன.இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் நேற்று 31 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று மாவட்டம் முழுவதும் 27 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது .

இதில் மாநகராட்சி பகுதிகளான காட்பாடி, சத்துவாச்சாரி, அரசமரப்பேட்டை, சாயிநாதபுரம், பாகாயம், ஆற்காடு ரோடு என பரவலாக 14 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது .

இந்நிலையில் நேற்று இரவு வேலூர் மாவட்டத்துக்கு 5 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளது. இவை உடனடியாக அந்தந்த தடுப்பூசி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!