வேலூர் மாவட்டத்தில் இன்று 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

வேலூர் மாவட்டத்தில் இன்று 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது
X
வேலூர் மாவட்டத்தில் இன்று 31 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சிகிச்சை பெறுப வர்கள் 60 பேராக உள்ளது .

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது . இதனால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 50 க்கும் கீழே உள்ளது . நேற்று தொற்று பாதிப்பு எண்ணிக்கை மாவட்டத்தில் 27 ஆக இருந்தது . இன்று 31 ஆக அதிகரித்துள்ளது . அதேநேரத்தில் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா உள் நோயாளியாக சிகிச்சை பெறுப வர்கள் 60 பேராக உள்ளது .

கொரோனா 3 வது அலையின் தாக்கம் ஆகஸ்ட் இறுதியில் இருக்கலாம் என்று மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ள நிலையில் அதை எதிர்கொள்ளும் வகையில் உரிய முன்னேற்பாடுகளை வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது . ஏற்கனவே கொரோனா 2 வது அலையின் பாதிப்பின் போது மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்புகள் அப்படியே பராமரிக்கப்படுகின்றன . மேலும் போதிய அலோபதி , ஆயுர்வேத , சித்த மருந்து இருப்புகளும் உரிய அளவில் இருக்கும்படி பராமரிக் கப்படுகிறது . அதோடு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொது மக்கள் உரிய முறையில் பின் பற்ற வேண்டும் என்றும் சுகாதாரத்துறை மக்களை கேட்டுக் கொண்டுள்ளது .

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!