பொய்கை மாட்டு சந்தைக்கு அனுமதி: வேலூர் கலெக்டர் அறிவிப்பு

பொய்கை மாட்டு சந்தைக்கு அனுமதி: வேலூர் கலெக்டர் அறிவிப்பு
X

மாதிரி படம் 

பொய்கை மாட்டுசந்தை, கே.வி.குப்பம் காய்கறி சந்தை ஆகியவை இன்றுமுதல் செயல்படலாம் என வேலூர் கலெக்டர் அறிவித்துள்ளார்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி கடந்த 17-ந் தேதி பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான பொய்கை கிராமத்தில் நடைபெற இருந்த மாட்டு சந்தைக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது தமிழக அரசு பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்க கூடாது என்பதை கருத்தில் கொண்டு ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அளித்துள்ளது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட பொய்கை மாட்டுசந்தை, கே.வி.குப்பம் காய்கறி மற்றும் ஆட்டுச்சந்தைக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் அனுமதி வழங்கப்படுகிறது.

இங்கு அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு முறைகளை வியாபாரிகள், பொதுமக்கள் உள்பட அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் எதிர்வரும் வாரத்தில் ஆடு, மாடு, காய்கறி சந்தைகள் நடத்த தடை விதிக்கப்படும்.

இந்த தகவலை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil