/* */

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் லாரியில் கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல்

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் பெங்களூரில் இருந்து சென்னைக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

HIGHLIGHTS

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் லாரியில் கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல்
X

பள்ளிகொண்டாவில் லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் போலீசார் இரவு நேரங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். அதன்படி இரவு 9 மணிக்கு பள்ளிகொண்டா சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் முத்து, மணிவண்ணன், விநாயகம் உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி சுங்கச்சாவடியை கடக்க முயன்றது.

அப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த லாரியை மடக்கி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் லாரியில் இருந்த டிரைவர் முன்னுக்குப்பின் முரணான பதில்களை கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து சோதனை செய்தனர்.

சோதனையின்போது பார்சல் பெட்டிகளுக்கு நடுவில் சுமார் சுமார் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 1,600 கிலோ புகையிலை மற்றும் குட்கா அடங்கிய பாக்கெட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து லாரியில் இருந்த மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சென்னை தாம்பரம் பழைய பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜகுருவி (வயது 25), விழுப்புரம் மரக்காணம் நடுகுப்பத்தை சேர்ந்த குமார் (30), தூத்துக்குடி மாவட்டம் அனையாபுரம் நல்லூர் பகுதியைச் சேர்ந்த கோபால் (30) என்பதும், பெங்களூரில் இருந்து சென்னைக்கு குட்கா கடத்திச் சென்றதும் தெரியவந்தது.

இதனையடுத்து அவர்கள் 3 பேர்மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் லாரி மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Updated On: 19 July 2021 2:28 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...