அதிக விலைக்கு யூரியா விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க விவசாயிகள் கோரிக்கை
அணைக்கட்டு தாலுகாவில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டம்
அணைக்கட்டு தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. வட்டாட்சியர் வேண்டா தலைமை தாங்கினார். துணை வட்டாட்சியர்கள் குமார், திருக்குமரேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்சுதாகரன் , சத்தியமூர்த்தி, சார்பதிவாளர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கூறுகையில், அரசால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் யூரியா கூடுதல் விலைக்கு விற்கப்படும் தனியார் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து அரசு அலுவலகங்களிலும் நிலவேம்பு மரம் வைக்கப்பட வேண்டும்.
கார்த்திகை பட்டத்தில் விவசாயம் செய்ய கால சூழ்நிலைகளுக்கு ஏதுவான நெல்மணி விதைகளை மட்டும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
மத்திய அரசு திட்டத்தில் வழங்கப்படும் மாட்டு கொட்டகை, ஆட்டு கொட்டகை கட்சி பாகுபாடின்றி தகுதி உள்ள விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், தோட்டக்கலை துறை சார்பில் வழங்கப்படும் அனைத்து சலுகைகளை பட்டியலிட்டு அடுத்த மாதம் நடைபெறும் குறைதீர்வு கூட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
விவசாயிகளின் நலன் கருதி மாதத்திற்கு 10 நாட்கள் 100 நாட்கள் வேலையாட்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும், கொய்யா விவசாயிகளுக்கு மானியத்தில் உரங்களை வழங்க வேண்டும், காய்கறிகளை ஏற்றுமதி செய்ய பயிற்சி அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினார்கள்.
இதில் சாதி சான்றிதழ் கேட்டு கடந்த 15 நாட்களாக அலைக்கழிக்கப்படுவதாக ஒரு விவசாயி கூறியதை தொடர்ந்து உடனடியாக அதனை வட்டாட்சியர் வேண்டா, வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகரன் வழங்கினர்.
இறுதியாக தாசில்தார்வட்டாட்சியர் வேண்டா கூட்டத்தில் வைக்க ப்பட்ட கோரிக்கைகளுக்கு விரைவாக தீர்வு காணப்படும் என்று கூறினார்
இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu