வேலூர் கோட்டத்தில் தபால் நிலையங்களில் ஆதார் சேவை மீண்டும் தொடங்கியது

வேலூர் கோட்டத்தில் தபால் நிலையங்களில் ஆதார் சேவை மீண்டும் தொடங்கியது
X

தபால் நிலையங்களில் ஆதார் சேவை மீண்டும் தொடங்கியது

ஊரடங்கு தளர்வுகளால் வேலூர் கோட்ட தபால் நிலையங்களில் மீண்டும் ஆதார் சேவை தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

வேலூர் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அணைக்கட்டு, சோழவரம், சி.எம்.சி. மருத்துவமனை, காந்திநகர், குருவராஜபாளையம், கணியம்பாடி, காட்பாடி, லத்தேரி, ஒடுகத்தூர், சத்துவாச்சாரி, தொரப்பாடி, ஓசூர், வடுகந்தாங்கல், விரிஞ்சிபுரம், வேலூர் கோட்டை, சைதாப்பேட்டை, தலைமை தபால் நிலையம் போன்றவற்றில் ஆதார் சேவை வழங்கப்பட்டு வந்தது.

கொரோனா பரவலையொட்டி இந்த சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது அரசு அறிவித்த தளர்வுகளால் மீண்டும் ஆதார் சேவை தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம், என வேலூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சீனிவாசன் தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!