ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட நூலகங்களுக்கு 1 லட்சம் புத்தகங்கள் வருகை
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட நூலகங்களுக்கு வந்துள்ள 1 லட்சம் புத்தகங்களை பிரித்து அனுப்பும் பணி
வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை மாவட்டங்களில் உள்ள 181 நூலகங்களுக்கு 50 தலைப்புகளில் 1 லட்சம் புத்தகங்கள் வந்துள்ளன. புத்தங்களை பிரித்து அனுப்பும் பணியில் நூலகர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் .
தமிழகத்தில் நூலகங்களுக்கு தேவையான புத்தகங்கள் அவ்வப்போது வாங்கப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள நூலகங்களுக்கு, அரசு சார்பில் இந்த ஆண்டும் தேவையான புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளது . இதில் பல்வேறு தலைப்புகளில், அனைவரும் தேவையான தகவல்களை பெறும் வகைகளில் நூல்கள் அந்தந்த நூலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்ட மைய நூலகத்தின் கீழ் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் மொத்தம் 181 நூலகங்கள் உள்ளது. இந்த நூலகங்களுக்கு தமிழ், ஆங்கிலம், பொது அறிவு, கணக்குத்தமிழ், இலக்கியம், இலக்கணம் போன்ற தலைப்புகளில் சுமார் 1 லட்சம் புத்தகங்கள் வந்துள்ளன. இந்த நூல்களை பிரித்து கிளை நூலகங்கள் மற்றும் ஊர்புற நூலகங்களுக்கு அனுப்பும் பணியில் நூலகர்கள் ஈடுபட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu