தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டபணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கும்பகோணம் அருகே கொருக்கை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிட கட்டுமானபணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் தீபக் ஜேக்கப்
தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டபணிகளை மாவட்டஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டபணிகளை ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் (15.06.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் கொருக்கை ஊராட்சியில் ரூபாய் 12.28 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடகட்டுமானப் பணிகள் குறித்தும், கொருக்கை ஊராட்சி புதுச்சேரி கிராமத்தில் செயல்படும் பொது விநியோகத் திட்டஅங்காடியில் உணவுபொருட்களின் இருப்பு குறித்தும், கொருக்கை ஊராட்சி புதுச்சேரி பழனியாண்டவர் குளம் ரூபாய் 9.99 இலட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவது குறித்தும் , கீழகொருக்கை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் கல்வித் தரம் குறித்தும்,
கொருக்கை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிட கட்டுமானபணிகள் போன்ற பல்வேறு வளர்ச்சி திட்டபணிகள் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேற்கண்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது என்றும் மாவட்டஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.
இந்தஆய்வின்போதுஒன்றிய குழு தலைவர் காயத்ரிஅசோக்குமார்,கும்பகோணம் வட்டாட்சியர் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தராஜ், பூங்குழலி, உதவி பொறியாளர்கள் சிவப்பிரகாசம், அய்யப்பன், சிவகுமார், ஊராட்சிமன்ற தலைவர் பகவான்தாஸ் மற்றும் அரசுஅலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu