நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் பேச்சு: மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் பேச்சு: மார்க்சிஸ்ட்  கட்சி கண்டனம்
X
மதுரை எம்பி வெங்கடேசனை ஒருமையில் பேசிய மாநில அமைச்சர் கே.என். நேருவுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

மக்கள் பிரதிநிதி என்றும் பாராமல் ஒருமையில் பேசும் மாநில அமைச்சர் கே.என். நேருவுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

மதுரையில் கடந்த புதன்கிழமை, தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் விமான நிலைய விரிவாக்க கட்டுமான பணிகள் குறித்து கேள்வி எழுப்பியதற்கு ,முறையான பதில் அளிக்ககாமல், சம்பந்தப்பட்டவர்களை விட்டு விட்டு என்னிடம் வந்து கேட்கிறீர்கள் மதுரையில் வெங்கடேசன் என்கின்ற ஒருவன் இருக்கின்றான் அவனிடம் கேளுங்கள் என்று ஒருமையில் பேசி பதிலளித்துள்ளார். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதியை பொதுவெளியில் இதுபோல் பேசுவது பெரும் கண்டனத்துக்குரியது. எனவே ,தமிழக முதல்வர் இப்பிரச்னையில் தலையிட வேண்டும். மேலும் இப்பேச்சு கண்டனத்துக்கூரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநகர் மாவட்ட ச் செயலாளர் மா. கணேசன், புறநகர் மாவட்ட செயலாளர் கே. ராஜேந்திரன் அறிக்கை ஆகியோர் வெளியிட்டுள்ளார்கள்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு