ஆதார் அட்டையில் புகைப்படத்தை புதுப்பிக்க விரும்புகிறீர்களா?

ஆதார் அட்டையில் புகைப்படத்தை புதுப்பிக்க விரும்புகிறீர்களா?
X

ஆதார் அட்டை மாதிரி. (கோப்பு படம்).

Aadhaar Card News -ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை புதுப்பிக்க விரும்புவோர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

Aadhaar Card News -இந்தியாவில் உள்ள அனைவருக்குமான அடையாள அட்டையாக ஆதார் அட்டை பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டின் குடிமகனான அனைவருக்கும் ஆதார் அட்டை அவசியம் என்பதை அரசு வலியுறுத்தி வருகிறது. இந்திய குடிமகன் என்ற அடையாளத்தை வெளிப்படுத்த ஆதார் அட்டை ஒரு முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது.

அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவது, வங்கியில் கணக்கு தொடங்குவது, செல்போன் சிம்கார்டு வாங்குவது என எந்தவொரு செயலுக்குமே ஆதார் அட்டை அவசியமாகிவிட்டது. ஒருவருடைய ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், செல்போன் எண் உள்ளிட்ட விவரங்கள் மட்டுமின்றி ஒவ்வொருவருக்கும் தனித்தனி அடையாள எண் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் ஆதார் அட்டை அவசியம் என்ற நிலையில், அந்த ஆதார் அட்டையில் ஏதேனும் தவறு இருந்தால் அதை எவ்வாறு திருத்திக் கொள்வது? என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், ஆதார் அட்டையில் எந்தவித தவறு இருந்தாலும் அதை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு uidai என்ற இணையதளத்தில் உள்ளது.

நீங்கள் குழந்தை பருவத்தில் எடுத்த புகைப்படம் தான் தற்போதும் உங்களின் ஆதார் அட்டையில் இருக்கிறது என்றால் அந்தப் புகைப்படத்தை மாற்றிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. புகைப்படத்தை மாற்ற விரும்புவோர் uidai என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கோ அல்லது அருகில் உள்ள ஆதார் பதிவு மையத்திற்கோ சென்று திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

uidai -இன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் எவ்வாறு சரி செய்ய முடியும் என்பதை முதலில் பார்ப்போம். உங்கள் ஆதாரின் புகைப்படத்தை மாற்றி, அதற்குப் பதிலாக வேறொரு சிறந்த படத்தைப் பயன்படுத்த விரும்பினால், இப்போது உங்களுக்கு ஆன்லைனில் இந்த வசதி வழங்கப்படுகிறது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் உதவியுடன் ஆதாரில் பெயர், மொபைல் எண், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் புகைப்படத்தை மாற்றலாம். இந்த செயல்முறையைப் பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால், இந்த செய்தியில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆதாரில் புகைப்படத்தைப் புதுப்பிக்க எளிதான வழிமுறை இதோ:.

1. ஆதார் அட்டையில் புகைப்படத்தைப் புதுப்பிக்க, முதலில் நீங்கள் uidai இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

2. அதில் ஆதார் பதிவு படிவத்தைப் பதிவிறக்கம் செய்து அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து அருகில் இருக்கும் ஆதார் பதிவு மையத்திற்கோ அல்லது ஆதார் சேவா கேந்திராவிற்கோ சென்று சமர்ப்பிக்க வேண்டும்.

3. ஆதார் நிர்வாகி பயோமெட்ரிக் முறையில் அனைத்து விவரங்களையும் சரிபார்ப்பார். அதன்பின்பு ஆதார் நிர்வாகி உங்களின் புதிய போட்டோவை எடுப்பார்.

4. இதையடுத்து ஆதார் நிர்வாகி ஒப்புகை சீட்டு, புதுப்பிப்பு கோரிக்கை எண்ணை வழங்குவார். இதற்கு சேவை கட்டணமாக ஜிஸ்டியுடன் ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படும்.

5. இதற்குப் பிறகு உங்கள் ஆதார் படம் புதுப்பிக்கப்படும். தற்போது தாலுகா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ஆதார் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு சென்று நுாறு ரூபாய் கட்டணம் செலுத்தி மாற்றிக் கொள்வதும் மிகவும் எளிய நடைமுறையாகவே இருந்து வருகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story