சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய அமைச்சர் ஆய்வு

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய அமைச்சர் ஆய்வு
X

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கன மழையால் சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகளை மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் மற்றும் ஜல்சக்தித்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

முன்னதாக டிசம்பர் 7 அன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் மூலம் வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த நிலையில், இன்று சென்னை வந்த அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் முடிச்சூர், வரதராஜபுரம் ஆகிய பகுதிகளுக்குச் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அங்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், வெள்ளத்தால் பாதித்த சென்னை மக்களின் நிலை கண்டு பிரதமர் மிகுந்த வெதனையடைந்ததாகவும் அதனால் மத்திய அமைச்சர்களை நேரில் சென்று மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்யுமாறும் கேட்டுக் கொண்டார். அந்த வகையில் மத்திய அரசு வெள்ள நிவாரண நிதியும் உடனடியாக வழங்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.

Tags

Next Story