பாம்பன் பாலம் திறக்கப்பட்டதும் புதிதாக மூன்று ரயில்கள் இயக்கம்..!
பாம்பன் புதிய பாலம்
பாம்பன் பாலம் பணிகள் முடிந்து புதிய பாலம் திறந்த பின்னர் ராமேஸ்வரத்திற்கு காரைக்குடி - திருவாரூர் வழியில் புதிய ரயில் இயக்கப்பட உள்ளது. அடுத்து காரைக்குடி புதுக்கோட்டை திருச்சி வழியில் 2 வாராந்திர ரயில் இயக்கவும் தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது
விபரம்: 1) தாம்பரம் To இராமேஸ்வரம் (No: 16103 - 16104) தினசரி ரயில். ( காரைக்குடி, திருவாரூர் வழி)
2) நெல்லை To ஜோத்பூர் (No: 22693 - 22694) வாராந்திர ரயில் (காரைக்குடி, திருச்சி, சென்னை எழும்பூர் வழியாக ஜோத்பூருக்கு இயக்கப்பட உள்ளது)
3) இராமேஸ்வரம் To மால்டா வரை (வடமாநிலம்) No:20613 - 20614 புதிய ரயில் (காரைக்குடி திருச்சி, சென்னை எழும்பூர் வழியில்) இயக்கப்பட உள்ளது. இதற்கான கிழமை, நேரம் விரைவில் அறிவிக்கபட உள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நவீன வசதிகளுடன் ரூ. 550 கோடி செலவில் பாம்பன் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. புதிய பாலம் கடலில் 2.8 கி.,மீ. நீளத்துக்கு நடுவில் பெரிய கப்பல்கள் சென்று வரும் வகையில் கட்டப்பட்டுள்ளது.. நடுவிலுள்ள 72.5 மீட்டர் லிஃப்டிங் கிர்டர் செங்குத்தாக மின் இயந்திரவியல் சக்தி மூலம் திறந்து கப்பல்களுக்கு வழிவிடும். பழைய பாலம் இருபுறமும் ஐந்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் மனித ஆற்றல் மூலம் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu