TRP Exam- பட்டதாரி ஆசிரியர், பயிற்றுநர் பணியிடங்கள் விண்ணப்பிக்க அவகாசத்தை நீட்டித்த டிஆர்பி!

TRP Exam- பட்டதாரி ஆசிரியர், பயிற்றுநர் பணியிடங்கள் விண்ணப்பிக்க அவகாசத்தை நீட்டித்த டிஆர்பி!
X

TRP Exam-டிஆர்பி போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு (கோப்பு படங்கள்) 

TRP Exam- டிஆர்பி ஏற்ப, ஒரு வார காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

TRP Exam, Application, Duration- பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வள மைய கருத்தாளர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் ஒரு வார காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் https://www.trb.tn.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வள மைய கருத்தாளர் (GRADUATE TEACHERS / BLOCK RESOURCE TEACHER EDUCATORS - BRTE) ஆகிய பணிகளுக்கு 2,222 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிறகு 2222 பணியிடங்களுடன் 360 இடங்கள் சேர்த்து 2582 பணியிடங்களுக்காக தேர்வு அறிவிக்கப்பட்டது.

இதற்காக ஜனவரி மாதம் 7ஆம் தேதி நடைபெற உள்ள போட்டித் தேர்வுக்கு நவம்பர் 1 முதல் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது. எனினும் தேர்வர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, அவகாசம் ஒரு வார காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தேர்வர்கள் டிசம்பர் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாக மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியும்.

இதனைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் வழங்க கோரியதன் அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர், வட்டார வள மைய பயிற்றுநர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் 08.12.2023 மற்றும் 09.12.2023 ஆகிய இரண்டு நாள்களுக்கு திருத்தம் செய்யலாம் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

என்ன தகுதி?

இத்தேர்வை எழுத ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு மற்றும் பி.எட். படிப்பை முடித்திருக்க வேண்டும். அதேபோல தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் (Tamil Nadu Teacher Eligibility Test Certificate- TNTET Paper – II) தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தேர்வு முறை

1. கட்டாய தமிழ் மொழித் தேர்வு

தேர்வர்கள் கட்டாய தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.

2. பாடங்களுக்கான எழுத்துத் தேர்வு

150 கேள்விகளுக்கு 3 மணி நேரம் தேர்வு நடைபெறும்.

3. சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வர்கள் முன்பதிவுக்கு முன்னர், https://trb1.ucanapply.com/register?sub_id=eyJpdiI6IlFva2IxUEN3R2F2YSsxL21tR203dGc9PSIsInZhbHVlIjoidmIxaEZqbVNWQ3dGQ2FhZnI0Q0ExUT09IiwibWFjIjoiMjZjYmM4N2RhYzY4NTkzZTVkNjgwMGQwZDhmNzk1N2Q5YzU1OTcyYzQ1MDVhNmI5ZTQ4MzlkYTc0YTQyZTA3ZCIsInRhZyI6IiJ9 என்ற இணைப்பை க்ளிக் செய்து, ஆசிரியர் தகுதித் தேர்வு 2ஆம் தாள் பதிவு எண்ணை உள்ளிட வேண்டும்.

அதையடுத்து https://trb1.ucanapply.com/login என்ற இணைப்பை க்ளிக் செய்து, லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளிட வேண்டும். தொடர்ந்து போதிய தகவல்களை உள்ளிட்டு, விண்ணப்பிக்க வேண்டும். முழுமையான விவரங்களைப் பெற: https://www.trb.tn.gov.in/admin/pdf/2603611744BT FINAL_25.10.2023.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.trb.tn.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!